இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை மே மாதம் 31 தேதி (வைகாசி 17) அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம் அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார்.
கடக ராசிக்கு, குரு 6வது மற்றும் 9வது வீட்டின் ஆதிபத்தியம் பெற்றவர். 6வது வீடு என்பது ஓரு துர் ஸ்தானமாகும். 6வது வீடு கடன், நோய் மற்றும் எதரிகளின் பலத்தினை பற்றி கூறுவது ஆகும். ஆனால் 9வது வீடு என்பது குடும்பத்தில் நடக்கும் நல்ல நிகழ்சிகளை சொல்வதாகும். 9வது வீடு பாக்கிய ஸ்தானம் என்ற மிக நல்ல ஸ்தானம் ஆகும்.
கடக ராசியாதிபதி சந்திரன் குருவினை சமமாக பாவிப்பார். ஆனால் குரு சந்திரனை நட்பாக பாவிப்பார். ஆகவே குரு கடக ராசிக்கு நல்லவரும் அவரே, கெட்டவரும் அவரே. அதனால் குரு எங்கு இருக்கிறார் என்பது மிகவும் முக்கியம். குரு இருக்கும் இடத்தை பொறுத்தே நல்லதையோ அல்லது கெடுதலையொ செய்வார்.
குரு இப்பொழுது பிரவசிக்கும் இடம் மிதுன ராசியாகும். மிதுன ராசி புதனுடைய வீடு ஆகும். குரு புதனை எதிரியாக கருதுபவர்.ஆகவே குரு பகை என்ற நிலையில் பலமற்று மிதுன ராசியில் உள்ளார். மிதுன ராசி கடக ராசிக்கு 12வது வீடு ஆகும். 12ம் இடம் என்பது ஒரு நல்ல இடம் இல்லை.
பலம் இழந்த குரு 6வது வீட்டின் தீய பலனை செய்ய பலம் இன்றி இருப்பது நல்லது என்றாலும், அவரால் 9வது வீட்டின் நல்ல பலனையும் செய்ய பலன் இன்றி இருப்பது கடக ராசிகாரர்களுக்கு சற்றே யோக குறைவு என்றே சொல்ல வேண்டும்.
9வது வீட்டின் அதிபதி என்பதால் கடக ராசிக்கு குரு கண்டிப்பாக கெடுதல் செய்ய மாட்டார். இப்பொழுது நாம் 2013 வருடத்திற்க்கான குரு பெயர்ச்சியின் பலன்களை நாம் பார்ப்போம்.
31.05.2013 முதல் 08.06.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
குடும்பத்திற்காக செலவுகள் செய்விர்கள்; அது நல்ல செலவுகளாக அமையும். பழைய கடன்களை தீர்ப்பதால் செலவுகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தினருடன் நல்ல உறவு இருக்கும். சிலருக்கு நோய் சம்பந்த காரணங்கள், மற்ற சிலருக்கு எதிரிகளால் ஏற்படும் சூழ்நிலைகளை சமாளிக்க செலவு செய்விர்கள்.
08.06.2013 முதல் 02.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
குரு 08.06.2013 அன்று அஸ்தமனமாகிறார். இந்த காலத்தில் குருவால் கிடைக்கும் நல்ல பலன்கள் அனைத்தும் தடைப்படும். மேலும் கடக ராசி மற்றும் கடக இலக்கின மக்கள் அனைவரும் நல்ல நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள். 02.07.2013 அன்று குரு மீண்டும் உதயமாகிறார்.
கடக ராசியினருக்கு கடன்கள் அடைபடும். சிலருக்கு தொல்லைகள் தந்து வந்த கடன்கள் சற்று கட்டுக்குள் அடைந்து இருக்கும். கடக ராசியினருக்கு நோய்களில் இருந்து விடுபடும் நிலை ஏற்படும். எதிரிகள் கடக ராசியினரிடம் பணிந்து செல்லும் நேரம் ஆகும். இதனால் சற்று செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. ஆனால் குடும்பத்தினருக்கு கடக ராசிகாரர்கள் செலவுகள் செய்து வந்த போதிலும் குடும்பத்தில் சற்று அதிருப்தியான சூழ்நிலை நிலவும்.
02.07.2013 முதல் 13.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
குடும்பத்தில் நிலவி வந்த இறுக்கம் சற்று தளர்ந்து சந்தோஷம் நிலவும். கடக ராசியினர் நோய், கடன் வகைகளுக்காக செலவு மீண்டும் செய்ய வேண்டி வரும். எதிரிகள் விஷயத்தில் சற்று ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.
13.07.2013 முதல் 30.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
மீண்டும் சாதகமான சூழ்நிலையை கடக ராசியினர் அனுபவிப்பர். எதிரிகள் இவர்களை கண்டு அச்சம் அடைவார்கள். கடக ராசியினர் பலம் ஓங்கி இருக்கும். நீண்ட காலமாக இருந்து வரும் கடன் பிரச்சினைகளை தீர்க்க முயற்சித்து அதில் வெற்றியும் காண்பார்கள். சிலருக்கு நோய் ஏற்பட்ட துன்பத்தில் இருந்து முற்றிலும் விடுதலை கிடைக்கும். கடக ராசியினர் எடுக்கும் தவறான முடிவுகள் குடும்பத்தில் சற்றே நிம்மதியை குழைக்கலாம்.
30.07.2013 முதல் 15.08.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
குடும்ப உறுப்பினர்களுடன் இருந்து வந்த மன வேற்றுமை நீங்கும். கடக ராசியினர் செலவுகளை கட்டுக்குள் வைத்து இருப்பது நல்லது. உடல் நலம், பண பரிவர்த்தனைகள் பற்றி கவனமும் மற்றும் தேவை இல்லாத விசயங்களில் தலையிடாமல் இருப்பது கடக ராசியினருக்கு நல்லது.
15.08.2013 முதல் 23.09.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
குடும்பத்தில் நிலவி வந்த கசப்புகள் விலகி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு நடப்பது நல்ல சந்தோசத்தை அளிக்கும். குடும்பத்திற்காக செலவு செய்வது அதிகரிக்கும். கடன் மற்றும் உடல் நிலையை பேணி பாதுகாக்க செலவுகள் செய்ய வேண்டி வரும். எதிரிகள் மறைமுகமாக தொல்லை தரக்கூடும்.
23.09.2013 முதல் 08.11.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
குடும்ப விசயங்களில் சற்றே கவனத்துடன் கையாள்வது நல்லது. உடல் நலம், கடன் சம்பந்த பட்ட விசயங்கள் மற்றும் அணைத்து விசயங்களும் கடக ராசியினரின் கட்டுபாட்டுகுள் இருக்கும்.
08.11.2013 முதல் 21.02.2014 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
குரு இந்த காலத்தில் வக்கிர நிலையை அடைகின்றார். எந்த ஓரு கிரகமும் வக்கிர நிலையை அடையும் பொழுது தன்னுடைய உண்மையான போக்கினை மாற்றி நாம் எதிர்பாராத பலனை செய்யும். நாம் இந்த வக்கிர குரு பலனை பின்பு ஆராய்வோம்.
கடக ராசியினரின் கவனத்திற்கு:
1. குரு பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சி பலன் நமது வாழக்கையில் சிறிய அளவே மாற்றங்களை கொடுக்கும் சக்தி உள்ளது.
2. அவரவர் தசா மற்றும் புத்தி பலன்களை பொறுத்தே வாழ்கையில் நிகழ்வுகள் நடைபெறும்.
3. இந்த குரு பெயர்ச்சி பலன்கள் உங்களின் தசா மற்றும் புத்தி அடிப்படையில் சற்று மாறுபட்டு நடைபெறும்.
4. கடக ராசியில் பிறந்தவர்கள் மோசமான தசையில் இருந்தால் இந்த குரு பெயர்ச்சி சற்று அதிகமான குடும்ப மற்றும் செலவுகளை சந்திக்க நேரும்.
5. கடக ராசியில் பிறந்தவர்களுக்கு குரு கெட்ட ஆதிபத்தியம் ஏற்பட்டு இப்பொழுது குருவின் மஹா தசை நடந்து கொண்டு இருந்தால் சற்றே மோசமான வகையில் பலன்கள் நடை பெரும்
6. 2வது, 7வது மற்றும் 9வது வீட்டு கிரகத்தின் திசை நடந்து அந்த கிரகம் மோசமான வீட்டில் இருந்தால் கண்டிப்பாக மோசமான சூழ்நிலை வீட்டில் நிலவும் அல்லது குடும்பத்திற்க்காக அதிகமான செலவுகளை சந்திக்க வைக்கும்.
7. 12வது வீட்டின் கிரகம் பலம் இழந்தோ அல்லது துர் ஸ்தான த்தில் இருந்து திசை நடத்தினால் அப்பொழுது குருவின் பெயர்ச்சி கூடுதல் கெட்ட பலன் தரும். செலவுகள் கட்டுக்கு அடங்காது..
8. குரு பிறந்த ஜாதகத்தில் நல்ல விட்டில் இருந்தால், குரு பெயர்ச்சி நன்றாக அமையவில்லை என்றாலும் வாழ்க்கை நன்றாகவே அமையும்.
9. நல்ல திசை நடந்து கொண்டு இருக்கும் பொழுது, கெடுதலான குரு பெயர்ச்சியால் பெரிய துன்பங்கள் நடக்காது.
10. பாக்கிய ஸ்தான அதிபதியான குரு எவ்வளவு கெட்ட இடத்தில இருந்தாலும் குரு பெயர்ச்சியில் கடக ராசி அன்பர்களுக்கு நன்மையே செய்ய முற்படுவார்.முடியாமல் போகும் நிலையில் கூட கெடுதல் செய்ய மாட்டார்.
11. குருவின் பலமற்ற பார்வை 4வது, 6வது மற்றும் 8வது வீட்டில் விழுகின்றது. கடன் மற்றும் உடல் கோளாறு பிரச்சினைகள் கட்டுக்குள் அடங்கியே இருக்கும்.
12. குரு பெயர்ச்சியால் உடல் நிலையில் எவ்வித நிரந்தர பாதிப்புகள் நடக்காது. அனல் 4வது அல்லது 6வது வீட்டிற்குரிய கிரகம் கெடுதலான ஸ்தானத்திலோ அல்லது கெடுதலான கிரக அமைப்புடன் இருந்து, தன்னுடைய மகாதிசையை நடத்தினால் உடல் நிலையிலோ அல்லது கடன் பிரச்சினைகளோ சற்றே அதிகபடியான துன்பத்தை கொடுக்கலாம்.
13. செலவு செய்யும் முறையில் கடக ராசியினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க நடந்து கொள்ள வேண்டும்.
14. குருவின் பரிகாரம் செய்யும் பொழுது இந்த குரு பெயர்ச்சியால் வரும் துன்பங்கள் குறைந்து இன்ப சூழ்நிலை நிலவும்.
குரு பரிகார முறைக்கு எங்களது www.jothidapariharam.blogspot.in என்ற வலைதளத்திற்கு வாருங்கள். படித்து பயன் பெறுங்கள்.
Comments
Post a Comment